ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு..! - உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் செல்லமுத்து அறிவிப்பு.



திருப்பூர்: ஈரோடு இடைத்தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக, அக்கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உழவாலயத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 99ஆவது பிறந்தநாள் விழா மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி தலைவி ராஜரீகா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பொருட்களுக்கும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்த ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்துவது எனவும்,100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாட்களை விவசாய பணிகளுக்கும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆனைமலை-நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தலைவர் முடிவு எடுக்கும் முழு அதிகாரம் வழங்குவது எனவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை ரூ.20000-யை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் அதிமுக வேட்பாளருக்கே எங்களுடைய ஆதரவு. பன்னீர் செல்வத்திற்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் மட்டும் ஜெயிக்கவா போகிறார். அனைத்து மாவட்டச் செயலாளர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது.

இருவரையும் இணைக்க பாஜக முயற்சி செய்வதாகக் கூறுவது அனைத்தும் அரசியல் நாடகம். கலைஞருக்குப் பேனா சிலையை கட்சிப் பணத்தில் வைத்தால் தவறில்லை,மக்கள் வரிப்பணத்தில் எழுதாத பேனாவை கடலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...