மத்திய ரயில்வே அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி கோரிக்கை மனு

பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இயக்கப்படாமல் இருந்த ஐந்து ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து பொள்ளாச்சி எம்.பி கோரிக்கை.


திருப்பூர்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அலுவலகத்தில் நேரில்‌ சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

அவர் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இயக்கப்படாமல் இருந்த ஐந்து ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போத்தனூர்‌ சந்திப்பை, கோவை சந்திப்பிற்கு நிகராக துணை ரயில்‌ நிலையமாக அமைக்க வேண்டும்.

பொள்ளாச்சியிலிருந்து விவசாயிகள்‌ பெரும்‌ அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில்‌ இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...