பல்லடத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய செயல்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படும்.



இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.



பேருந்து நடத்துனர் அறிவுறுத்தினாலும், கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்காமல் பேருந்து படிக்கட்டுகளில் சாகசம் என நினைத்து உயிர் பயமின்றி தொங்கியபடி நாள்தோறும் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துகள் நடைபெற்று உயிர் பலி ஏற்படும் முன்பு, மாணவர்களின் இந்த ஆபத்தான பேருந்துப் பயணத்தை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...