தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திருட்டு வழக்கு - சிசிடிவி காட்சி உதவியுடன் 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைசாலையில் ஸ்டேட் பேங்க் அருகிலும் மற்றொரு பகுதியான பெரிய கடைவீதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக தாராபுரம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த நபர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அந்தப் புகார்களை பதிவு செய்த காவல்துறையினர், தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதில், கோவை மாவட்டம் செல்வபுரம், சொக்கநாத புதூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தனது கூட்டாளிகளான நந்தகுமார், மகேஸ்வரன், வல்லரசு ஆகியோரை அடையாளம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தொடர்புடைய 3 பேரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...