உடுமலையில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாணவ மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


திருப்பூர்: உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி அறக் கட்டளை கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த ஆளுமை மேம்பாட்டுக் கருத்தரங்கில் டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விருந்தினராக கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் பேசினார்.

அதில், இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிவதில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். தொலைபேசிகளை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாணவ-மாணவியர் பெற்றோர் மற்றும் சான்றோர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.



மன தைரியத்துடன் தன்னம்பிக்கையுடன் எந்த விஷயம் துவங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆர்வத்துடன் செயல்பட வேண்டும், என்றார். இதில், ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் இயக்குனர் விஜயகுமாரி, திட்ட அலுவலர் ரத்தினவேல், உடுமலை ரோட்டரி தேஜஸ் சங்க தலைவர் சத்யம் பாபு, திட்ட இணைய அலுவலர்கள் எஸ்.எம்.நாகராஜ், முருகநாதன் மற்றும் உடுமலை ரோட்டரி சங்கத் தலைவர் ரகுநந்தன் ராஜு, ரோட்டரி கேலக்ஸி தலைவர் வழக்கறிஞர் பொன்ராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...