பாதயாத்திரை சென்ற கோவை மாநகராட்சி மேயர் - மக்கள் குறை ஏற்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து. மேயர் கல்பனா பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு செல்வதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு.


திருப்பூர்: கோவை மாநகராட்சி மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்துவருகிறார். இவர், தமது சொந்த ஊரான மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தைப்பூசத்தை ஒட்டி, கடந்த சனிக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.

நேற்று இரவு அவர் பழனி கோயிலை சென்றடைந்தார். இதன் காரணமாக, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் குறை ஏற்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையும் நிர்வாக காரணங்களுக்காக குறை ஏற்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2முறையாக இன்றும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...