கோவையில் பைக்கை திருடியபோது உரிமையாளரிடம் சிக்கிய கொள்ளையர்கள் - போலீசாரிடம் ஒப்படைப்பு!

கோவை சுங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு பேரை, உரிமையாளரே அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கையும் களவுமாக பிடித்து பந்தைய சாலை போலீசாரிடம் ஓப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சுங்கம் அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை உரிமையாளரே மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுங்கம் பகுதியில் வசிப்பவர் முகமது அலி. இவர் தனது வீட்டின் தரைத்தளத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே நிறுத்தி வைத்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே, நள்ளிரவில், வாகனத்தை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையறிந்து வெளியே வந்த போது 2 நபர்கள் ஸ்க்ரூ டிரைவர் மூலமாக வாகனத்தின் சங்கிலியை உடைத்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார். தொடர்ந்து, பந்தய சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் கைதான நபர்கள், ஈரோட்டைச் சார்ந்த முத்துசாமி மற்றும் தாராபுரத்தைச் சார்ந்த மாயக்கண்ணன் என்பது தெரியவந்தது. மேலும், முத்துசாமி மீது ஏற்கனவே ஈரோடு காவல் நிலையத்தில் பைக் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நான்கு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் பந்தய சாலை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...