கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூரில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி வேன் மின்கம்பத்தின் மீது மோதி நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வேனில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கோவை - பொள்ளாச்சி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான மாணவர்களை ஏற்றி செல்லும் வேன் காலையில் பள்ளியில் மாணவர்களை இறக்கிவிட்டு பெட்ரோல் நிரப்புவதற்காக கல்லாங்காடுபுதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது, பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பும்போது பின்னால் கோவையில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பள்ளி வேனின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.



இதில் பள்ளி வேன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. மேலும், அரசு பேருந்து முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. பள்ளி வேனில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



அரசு பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் பொள்ளாச்சி-கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...