ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

நகராட்சி, மின்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தரம் கோரி கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.



இந்நிலையில் நீலகிரி மாவட்ட சிஐடியு சார்பாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மின்துறை, நகராட்சி, டாஸ்மாக் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சிஐடியு நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...