கோவையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி - வனத்துறை, பறவைகள் வல்லுநர்கள் அடங்கிய 20 குழுக்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் நீர்நிலைகளில் 9,494 பறவைகளும், தரிசு நிலங்களில் 1189 பறவைகள் வரை வசித்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வாளையாறு அணைக்கட்டு பகுதியில் 1189 பறவைகள் கண்டறியப்பட்டன. பெத்திக்குட்டையில் 959, தரிசு நிலங்களில் 30 முதல் 89 இன பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 29 ஆம் தேதி பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது. கோவை மாவட்டத்தில் 20 ஏக்கர் தரிசுநிலம் கண்டறியப்பட்டு, வனத்துறை, பறவைகள் வல்லுர்நர்கள் அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டது. வனத்துறையினர் உட்பட 83 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதேபோல, வாளையாறு அணையின் பின்புறம் குறிச்சி, உக்கடம், செங்குளம், வெள்ளலூர், சிங்காநல்லூர் , கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம், இருகூர், பேரூர், நரசம்பதி, சூலூர், காளப்பட்டி, வேடப்பட்டி சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறை ரேஞ்சர்கள், ஊழியர்கள் தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.



மொத்தம் உள்ள 20 குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் 9,494 பறவைகளும், தரிசு நிலங்களில் 157 முதல் 1189 வரை பறவைகள் வசித்து வருகிறது. அதன் மொத்த சராசரி 474 எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வாளையாறு அணைக்கட்டு பகுதியில் 1189 பறவைகள் கண்டறியப்பட்டது. பெத்திக்குட்டை பகுதியில் 959, தரிசு நிலங்களில் 30 முதல் 89 இன பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் சராசரியாக 54 பறவை இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.



குறிப்பாக பள்ளப்பாளையம் தரிசு நிலத்தில் கருப்பு நிற கிங் பிஷர் (king fisher), அதேபோல வாளையாறு அணை, உக்கடம், குறிச்சி குளம் நீர் பிடிப்பு பகுதியில் சிறிய தோல் குருவி இன பறவைகள் அதிகளவு கண்டறியப்பட்டுள்ளது. பெத்திக்குட்டையில் மீன் கொத்தி கழுகு, அதிக புள்ளி கழுகுகள் கண்டறியப்பட்டுள்ளது.



இந்த முறை பறவை கணக்கெடுப்பில் சிறிய சீழ்க்கைச் சிறகி, நீளசிறகு வாத்து, குள்ளதாரா வாத்துகள், வென்புருவ வாத்து, பட்டாணி உப்பு கொத்தி, ஆற்று உள்ளான், ஊசி வால் கோரை, இலைகோழி, தாமரை இலை இறக்கை கோழி, சாம்பல் நாரை, நெந்நாரை, உள்ளிட்ட மேலும் 26 வகை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது.



முதல் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் மார்ச் 5ம் தேதி இரண்டாம் கட்டமாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...