உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தைப் பரிசீலிக்க வேண்டும்..! - தமுமுக பொருளாளர் கோவை உமர் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனம் செய்ததை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொருளாளர் கோவை உமர் கோரிக்கை.



திருப்பூர்: சென்னை கூடுதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரியை நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலப் பொருளாளர் கோவை உமர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 15ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் 191வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் கோவை உமர், மாநில அமைப்புச் செயலாளர் பழநி பாருக்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பல்லடத்தில் இருந்து சுமார் 5கி.மீ சுற்றளவில் அனைத்து சமூக மக்களும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலப் பொருளாளர் கோவை உமர், பாஜகவின் வழக்கறிஞர் அணியிலிருந்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிராக மிக மோசமான கருத்துக்களைத் தெரிவித்து வந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை கூடுதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அவரை நீதிபதியாக நியமனம் செய்ததை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரச்சனைக்கு மாநில தலைமை நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். 25 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு சிறையில் அவதிப்படும் இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...