துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு உதகையில் மாணவர்கள் அஞ்சலி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோருக்கு உதகையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.



நீலகிரி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்காக, உதகையில் பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 5 முறைக்கு மேல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஏரளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.



மேலும் பள்ளி தாளாளர் செல்வநாதன் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்திய மாணவர்கள் பின்னர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மற்றும் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து வாடும் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...