உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நிலையில், தற்பொழுது வட மாநிலத்தவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு கொடுத்து வருவதால், கூலி மேலும் குறைந்துள்ளதாகத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.



அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி ஐந்து பேர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணனை சந்தித்த தொழிலாளர்கள், பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நாங்கள், தற்பொழுது வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பால், காய் ஒன்றுக்கு 77 பைசா பெற்றுக் கொண்டு வேலை செய்வதாகவும், அவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு தருவதோடு, செலவு செய்து வேலை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் எங்களுக்கு முறையான கூலி கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தங்களது குடும்பத்தோடு குழந்தைகளோடும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...