குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

குன்னூர் - ஒட்டுப்பட்டரை சாலையில் நடந்து சென்ற பத்திர விற்பனையக உரிமையாளர் முகமது கனி, கால் தடுமாறி சாலையில் விழுந்த நிலையில் அவ்வழியாக குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி விழுந்து அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூரில் பத்திர விற்பனையகம் நடத்தி வருபவர் முகமது கனி. இவர், குன்னூர் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம் செல்லக்கூடிய மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் உள்ள பத்திர விற்பனையகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த கேபிள் முகமது கனியின் காலில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



அப்போது, அவ்வழியே குன்னூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் நகர போலீசார், முகமது கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...