வால்பாறை அருகே பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து - இருவர் பலி

வால்பாறை அருகே அரசு பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் 2 பேர் பலி. பேருந்து அதிவேகமாக வந்ததால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்காமல் பேருந்து சிறை பிடிப்பு.



கோவை: வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதியில் விபத்துக்கு காரணமான பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட்டை சேர்ந்தவர்கள் அர்விந்த்(25) மற்றும் சந்தோஷ்(20). இருவரும் அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.



அப்போது எதிரே வந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.



இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



பேருந்து அதிவேகமாக வந்ததால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்காமல் பேருந்தைச் சிறை பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...