கோவையில் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பி திருட்டு - 9 பேர் கைது

கோவையில் தனியாருக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையின் கதவை உடைத்து ரூ.14.60 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடிய சிறுவன் உட்பட 9 பேர் கைது.


கோவை: கே.ஆர்.புரம் பகுதியில் 1,440 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு கே.ஆர்.புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கம் போல இரவு பணி முடிந்து பணியாளர்கள் வீட்டிற்குச் சென்றனர். இன்று காலையில் வழக்கம் போல தொழிற்சாலைக்கு காவலாளி வந்து பார்த்த போது தொழிற்சாலையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கம்பனியிலிருந்து சுமார் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான 1,440 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கம்பனியின் பொதுமேலாளர் வரதராஜன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுமார் 1.5 டன் காப்பர் கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

விசாரணையில் பல்லடம் சாமிக்கவுண்டம் பாளையத்தில் லிங்கம் மெட்டல்ஸ் என்ற பழைய இரும்பு வியாபாரம் செய்யும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம்(25) மற்றும் கேரளாவை சேர்ந்த ஆனந்தகுமார் (27), திருப்பூரை சேர்ந்த அமீர் பாஷா(24), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சூர்யா (23), பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபு (22), கோவையை சேர்ந்த செந்தில்குமார் (32), பிரகாஷ் (42), 17வயது சிறுவன், ஆனந்த், ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு, இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட்டு கிடைக்கும் திருட்டுச் சொத்துக்களை வாங்கி விற்று மேற்படி பங்கு கொடுத்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 9 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் பொருட்களை மீட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...