கோவை மதுக்கரை அருகே வீட்டில் தீ - டிவி, நகைகள், ஆவணங்கள் எரிந்து நாசம்!

கோவை மதுக்கரை அருகே பாலத்துறையில் வீரக்குமார் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் டிவி, நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை மதுக்கரை அருகே குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்ற நேரத்தில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, நகைகள், டிவி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் (34). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றதாக தெரிகிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே சென்றபோது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் செல்போன் மூலம் அழைத்து வீட்டில் உள்ளே தீப்பிடித்து எரிவதாக தகவல் அளித்துள்ளார். மேலும் அவர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தார்.



இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த டி.வி, உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 4.5 சவரன் தங்க நகை, பல்வேறு ஆவணங்கள் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானது.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பழனிக்கு செல்வதற்கு முன்னதாக வீட்டில் விளக்கு பற்றவைத்து சென்றதாக தெரிகிறது. எனவே விளக்கு மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...