கோவை இடையர்பாளையத்தில் மாநில அளவிலான யோகா போட்டி - மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவை இடையர்பாளையத்தில் நடந்த 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



கோவை: இடையர்பாளையத்தில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

கோவையில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி, இடையர்பாளையத்தில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. ஆல்பா யோகா பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற போட்டிகளை யோகா கல்ச்சுரல் சொசைட்டி முன்னாள் தலைவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 பிரிவுகளாகவும், இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண்களுக்கு தனி பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில் போட்டியாளர்கள் 3 ஆசனங்களை 3 நிமிடங்கள் செய்து காட்டினர். மேலும் பேக் பெண்டிங், ஹேண்ட் பேலான்சிங், லெக் பேலன்சிங், பாடி டிவிஸ்டிங் ஆசனங்களும் ஆர்டிஸ்டிக் யோகா, ரிதமிக் யோகா உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



இதில் ஆல்பா யோகா பயிற்சி மைய நிறுவனர் பழனிச்சாமி மற்றும் யோகா ஆசிரியர்கள் சம்பத்குமார், ராஜ்குமார், நாகலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு யோகா குரு சுவாமி தேஜாமயானந்தா பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...