திருங்கையர் முன்மாதிரி விருது 2023-க்கு கருத்துருக்கள் வரவேற்பு

ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு கருத்துருக்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரவேற்பு.



கோவை: திருங்கையர் முன்மாதிரி விருது 2023-க்கு கருத்துருக்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு திருநங்கையர்களில் சிறப்பாக முன்னேறியவர்களில் ஒருவருக்கு முன் மாதிரி விருது திருங்கையர் தினமான ஏப்ரல்-15ம் தேதி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருங்கையர் முன்மாதிரி விருதுக்கு 1,00,000 லட்சம் காசோலை மற்றும் சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த விருதுக்கு, திருநங்கையர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது உள்ளிட்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

மேற்படி இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் திருநங்கையர்கள் உரிய கருத்துருக்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி உரிய வழிமுறைகளுடன் விருதிற்கான கருத்துருக்களை 28.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...