கோவை கே.ஜி.சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - சிசிடிவி காட்சியின் மூலம் கொள்ளையனை பிடித்த போலீஸ்!

கோவை குட்டிகவுண்டன்பதி பகுதியில் விவசாயி ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணத்தை திருடிவிட்டு மற்றொரு வீட்டில் திருட முயன்ற இளைஞரை, சிசிடிவி காட்சி உதவியுடன் கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கே.ஜி.சாவடி அடுத்த குட்டிகவுண்டன்பதி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (53). விவசாயியான இவர், நேற்று தனது விவசாய நிலத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து விவசாயப் பணி மேற்கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.15,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி தங்கவேல் கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாளையார் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.



இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அபூபக்கர் (22) என்பதும், விவசாயி தங்கவேலுவின் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும், மற்றொரு வீட்டில் திருடமுயன்றதும் தெரியவந்தது.

மேலும், அவர், தற்போது நவக்கரை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...