புதுச்சேரியில் ஈஷாவின் ஆதியோகி ரத யாத்திரை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

புதுச்சேரிக்கு வந்த 7 அடி உயரமுள்ள ஆதியோகி சிலையுடன் கூடிய ஈஷாவின் ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது, வரும் 18ஆம் தேதி கோவை மற்றும் புதுவையில் நடக்கவுள்ள மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஆதியோகி ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆதியோகி சிலையை நேரில் கண்டு தரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.



அதில் ஒரு ரதம் பிப்ரவரி 3ஆம் தேதியன்று மாலை புதுச்சேரி வந்தடைந்தது. மறுநாள் காலை லாஸ்பேட்டையில் குரு பூஜையுடன் புறப்பட்ட ஆதியோகி ரதமானது, சங்கர வித்யாலயா பள்ளி, உழவர் சந்தை, முந்தியால்பேட்டை, பாண்டிச்சேரி டவுன், முதலியார் பேட்டை, இந்திரா காந்தி சதுக்கம், கோரிமேடு, தட்டான்சாவடி, கதிர்காமம் என பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம், ரெட்டியார் பாளையம், முருங்கம்பாக்கம், இரும்பாக்கம், பாகூர் ஆகிய இடங்களுக்கும் பயணித்தது. ஆதியோகி ரதம் செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்கள் திரளாக கூடி ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களுடைய ஊர்களிலேயே நேரில் தரிசனம் செய்வதற்கு இந்த யாத்திரை சிறந்த வாய்ப்பாக அமைந்தது என பக்தர்கள் தெரிவித்தனர்.

நான்காம் நாளான நேற்று வில்லியனூருக்கு சென்ற ரதம் இன்று முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விழுப்புரத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், புதுச்சேரியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...