வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகரிகள் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனால் வால்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையின் இரு புறம் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வால்பாறை டவுன் பகுதியில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.



அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளன. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் உமா மகேஸ்வரி தலைமையில் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, புதுத்தோட்டம் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையம் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வாகனங்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.



காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால், வால்பாறை பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...