கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் - பல்லடத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் நாளை கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, நில வருவாய் ஆய்வாளர் அனிதா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள், கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள்,

கடை உரிமையாளர்கள் ஆகியோரிடம் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு எப்படி அணுகுவது என்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள், வேலை செய்யும் சுதந்திரம், சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெரும் உரிமை குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.



நாளை அரசு பள்ளி மற்றும் பொது இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்திடவும், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...