திருப்பூரில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் - 1783 மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம் கார்டுகள் விநியோகம்!

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, 1783 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் வினீத் வழங்கினார்.



திருப்பூர்: தமிழக அரசின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் புதுமைப்பெண் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய், அவர்கள் கல்வி பயின்று முடிக்கும் வரையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.



அதற்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 40 கல்லூரிகளில் இருந்து 3,657 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக 49 கல்லூரிகளில் இருந்து 1,783 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டன.



இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வினீத், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினர். இந்தத்திட்டத்தினை முடித்து வைத்து மேடையிலிருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியரிடம், முதலாம் ஆண்டு அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பதில் இடையூறு ஏற்படுவதாக புகார் அளித்தார்.



அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினீத் தனது கைபேசியிலேயே அதனை சரிபார்த்து நான்கு நாட்களுக்குள் அவை பரிசீலிக்கப்படும் எனவும், இல்லையென்றால் உரிய வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் பிரச்சனையை சரிகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...