பல்லடத்தில் பெட்ரோல் பங்க் அருகே பற்றி எரிந்த லாரி - பெரும் விபத்து தவிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெயகிருஷ்ணன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரமத்தி வேலூரில் இருந்து திருப்பூருக்கு லாரியில் லோடு ஏற்றி வந்துள்ளார்.

வாடகை ஏதும் இல்லாததால் பல்லடம் - உடுமலை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார். பொள்ளாச்சிக்கு இளநீர் ஏற்ற செல்வதற்கு தயாரான நிலையில், திடீரென லாரியின் பின்பக்கம் தீ பற்றி எரிய தொடங்கியது.



அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



மேலும், பெட்ரோல் பங்க் அருகிலேயே லாரி தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...