உதகையில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் - மாணவியருக்கு ஏ.டி.எம் கார்டுகள் விநியோகம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் 2-ஆம் கட்ட புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டு, 165 மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி தொகை வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டுகள் விநியோகிக்கப்பட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் கீழ்அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத்தினைஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



அதன் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம் கார்டு (பற்று அட்டை)களை வழங்கிய ஆட்சியர் அம்ரித், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு திட்ட கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.



நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர்கள் வாணீஸ்வரி (உதகை), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் மாயன்(எ) மாதன் (உதகை), சுனிதாநேரு (குன்னூர்), கீர்த்தனா (கூடலூர்), உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி,



மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...