கோவை மதுக்கரையில் செல்போன் டவரில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள ஜியோ செல்போன் டவரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி மற்றும் ஓயர்கள் என பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.


கோவை: மதுக்கரை அருகே ஜியோ செல்போன் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் பேட்டரி, ஒயர்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மதுக்கரை அடுத்த அறிவொளிநகர் பகுதியில் ஜியோ செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த டவருக்கு கிழ்பகுதியில் உள்ள பேட்டரி யூனிட்டில் திடிரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

மின்கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் டவர் உள்ளே இருந்தஒயர்களில் தீ பரவி டவரின் மேல்பகுதியில் இருந்த ஒயரிலும் பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...