கிணத்துக்கடவு அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை!

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்து, வாழை மரங்களை கடித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி, மரவள்ளி, வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோதவாடி கிழக்குப் பகுதியில் உள்ள சிவசாமி என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார்.



சாகுபடி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் வாழை வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் வாழை தோப்புக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.



இரவு நேரங்களில் வரும் காட்டு பன்றிகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரத்தின் அடிப்பகுதியை கடித்து சேதப்படுத்தி வருவதால், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...