உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக 700 கன அடி தண்ணீர் திறப்பு!

திருப்பூர் உடுமலை அமராவதி அணையில் இருந்து மதகுகள் வழியாக 300 கன அடியும், பிரதான கால்வாய் வழியாக 400 கன அடி என 700 கன அடி தண்ணீர் திறப்பு. இதன் மூலம் திருப்பூர், கரூரில் உள்ள 41 ஆயிரத்து 117 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்க நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் பகுதியில் உள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு 2,661 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட்டு நேற்று பாசன காலம் நிறைவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பழைய மற்றும் புதிய ஆய்வு கட்டு பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கரும்பு மற்றும் நிலைப்பயிர்கள் எனப்படும் தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயன்பெறும் வகையிலும் கூடுதல் நீர் வழங்க வேண்டும் என பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



இந்நிலையில் தற்போது தமிழக அரசு பாசன காலத்தை நீட்டித்து வரும் 28ஆம் தேதி வரை தண்ணீர் வழங்க ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அமராவதி அணையில் இருந்துதண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பின் மூலம் திருப்பூர் கரூர் மாவட்டத்தில் உள்ள 47 ஆயிரத்து 117 பாசன நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.



அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் 71.10 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு தற்போதய நீர்வரத்து 117 கன அடியாக உள்ள நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மதகுகள் வழியாக 300 கன அடியும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் வழியாக 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...