நீலகிரி மாயாற்றின் குறுக்கே நடைபாதை - கும்கி யானைகள் உதவியுடன் பணிகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்காக மாயார் ஆற்றின் குறுக்கே தற்காலிக நடைபாதை அமைக்கும் பணி, கிருஷ்ணா, ஜான் என இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



நீலகிரி: à®¨à¯€à®²à®•ிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் தெப்பக்காடு பழங்குடியின கிராமம் உள்ளது. மாயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

மசினகுடி பகுதி மக்களும் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்ட பழைய பாலம் உடைக்கப்பட்டது.

இதனால், தெப்பக்காடு பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் 2 கி.மீ தற்காலிக இணைப்பு சாலையில் வனப்பகுதி வழியாக சுற்றி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. அவ்வாறு வரும்போது புலிகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது.



இதனையடுத்து பழங்குடியின மக்கள் எளிதில் வீடுகளுக்கு சென்று வருவதற்கு வசதியாக, மாயாற்றின் நடுவே காய்ந்த மரங்களை வைத்து தற்காலிக நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, முதுமலை தெப்பக்காடு யானை முகாமில் உள்ள கிருஷ்ணா மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் உதவியோடு ஆற்றின் நடுவே மரங்கள் மூலம் நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.



இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உடைக்கப்பட்ட பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் தெப்பக்காடு பழங்குடியின மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...