கோவை பாரதியார் பல்கலைகழகத்தால் வந்த சோதனை..! - புலம்பும் கோவை விவசாயி குடும்பம்!

கோவையில் ஜப்தி செய்யப்பட்ட பாரதியார் பல்கலைகழக பேருந்தை வீட்டின் முன் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் விவசாயி, அந்த பேருந்தை ஓட்டவும், விற்கவும் முடியாமல், இழப்பீடும் கிடைக்காமல் விவசாயி குடும்பம் வேதனை.


கோவை: நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக பேருந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டின் முன்பாக கோவை விவசாயி நிறுத்தி பராமரித்து வருகிறார்.

கோவையில் பாரதியார் பல்கலைகழகம் அமைப்பதற்காகக் கடந்த 1980ஆம் ஆண்டு மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 900 ஏக்கர் நிலம், அந்தந்த நிலம் உரிமையாளர்களிடமிருந்து பல்கலைகழகம் பெற்றது. அப்போது ஏக்கருக்கு ரூ.8,500 மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும் விவசாய பூமி என்பதால் விவசாய நில உரிமையாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது. ஆனால் நிலத்திற்கு பல்கலைகழகம் கொடுத்த தொகை மிக குறைவான தொகை எனக்கூறி நில உரிமையாளர்கள் போராட துவங்கினர்.

மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் போடப்பட்டன. இதில் தற்போது வடவள்ளியில் வசித்து வரும் முருகேசன், அவரது சகோதரர் மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலம் பல்கலைக்கழகத்திற்குக் கொடுக்கப்பட்டது.

இதற்கு உரிய தொகை வேண்டும் என இவர்களும் நீதிமன்றத்தை நாடினர். அதில் 1.5 ஏக்கருக்காக வழக்கு தனியாகவும் மற்ற மூன்று ஏக்கருக்கான வழக்கு தனியாகவும் போடப்பட்டது.



இந்நிலையில் 1.5 ஏக்கருக்கு உரிய நிதி வழங்க கோரிய வழக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பாரதியார் பல்கலைகழக பேருந்தை பறிமுதல் செய்து முருகேசன் சகோதரர்களிடம் ஒப்படைக்கவும், பணத்தை கொடுத்து விட்டு பேருந்தை பெற்றுச் செல்லவும் உத்தரவிட்டது.



இதையடுத்து அந்த பல்கலைகழக பேருந்து ஜப்தி செய்யப்பட்டு முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.



முருகேசன், மாரியப்பன் சகோததரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைகழக பேருந்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த பேருந்தை நிறுத்தி வைத்திருக்க வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வீட்டிற்கு முருகேசன் குடும்பத்தினர் மாறியுள்ளனர்.

அவ்வாறு ஒவ்வொரு முறையும் வீடு மாற்றும் போது சுமார் 20 ஆயிரம் செலவு செய்து பேருந்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.



ஜப்தி செய்த பேருந்தை ஓட்டவும் முடியாமல், விற்கவும் முடியாமல், இழப்பீடும் கிடைக்காமல் கூடுதல் செலவு செய்து வருவதாக குடும்பத்தின் வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...