மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறுநீரக கோளாறு காரணமாக பரோலில் வெளிவந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபுதாஹிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி, பின்னர் சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளியான அபுதாஹிர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (42). இவர் கடந்த 1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். மேலும் மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றவர்.

சிறையில் அடைக்கப்பட்ட அபுதாகிர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறு, முடக்கு வாதம் ஏற்பட்டு நிரந்தர பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபுதாகிர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...