வால்பாறை அருகே தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சோகம்

வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது தேனீக்கள் தாக்கியதில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் மாரிமுத்து (45) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்த மாரிமுத்து உடல் நலக்குறைபாடு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று பிற்பகல் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்கு மாரிமுத்து கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை தாக்கியுள்ளது.



இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் கவுன்சிலர் அன்பரசன் செல்வம் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சாலையில் நடந்து சென்றவரை தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...