கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் தார் சாலை பணி - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டம் தண்ணீர்பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 32 வது வார்டு மற்றும் 37 வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை, மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5.28 கோடி மதிப்பீட்டில் 2.96 கிலோமீட்டர் நிலத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சாலை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாலையின் அகலம் மற்றும் தரம் குறித்தும் ஒப்பந்ததாரிடம் கேட்டறிந்தார்.

அதேபோல் விரைந்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாடுத்து கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...