உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலியான சோகம்!

உடுமலை அடுத்த மானுப்பட்டி அருகே நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிக்காக மண் எடுத்துச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை - மூணார் செல்லும் பாதையில் மானுப்பட்டி அருகேயுள்ள கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காகவனப்பகுதியில்இருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் இரவு பகலாக மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண் ஏற்று செல்லும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று அதிகாலையில் மானுப்பட்டி பகுதியில் இரண்டு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தனிடையே மண் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் மூலம் அதிகப்படியான விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

டிப்பர் லாரி ஓட்டுனராக உள்ள வட மாநிலத்தை சாா்ந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் மது போதையில் ஓட்டுவதாலும் வாகனங்களில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததாலும் விபத்து ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...