மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில்: புதிய டீசல் என்ஜினுடன் சேவை தொடக்கம்!

குன்னூர் ரெயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரெயில் எஞ்சின் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம்சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



திருப்பூர்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என்.சிங் சேலம், பாலக்காடு, திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்தார். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.



பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர் .என். சிங் ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பால நடைபாதையை பார்வையிட்டார்.



தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட பிரேக்ஸ்மேன் ஓய்வறையை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்ட பர்ன்ஸ் ஆயில் என்ஜின், குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் ரயில் எஞ்சினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.



புதிதாக மாற்றிவடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின், மலை ரெயிலில் இணைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவையை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேலாளர் ஹரிகிருஷ்ணா மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தென்னக ரயில்வே பொது மேலாளர் மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றனர்.

செல்லும் வழியில் கல்லாறு அடர்லி ஹில் குரோவ், குன்னூர் ஆகிய மலைப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...