இனி பிப்ரவரி 14 என்பது 'பசுக்களை கட்டிப் பிடிக்கும் தினம்' - இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு

பசுமாடுகள் இந்திய கலாச்சாரத்தின் முதுகெலும்பு என்பதால் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


டெல்லி: பிப்ரவரி 14ஆம் தேதியை பசுமாடுகளை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நலவாரியம் அறிவித்துள்ளது.



இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பசுமாடுகள்தான் இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என நமக்கு தெரியும். பசு நம்மை வாழவைக்கும் நம் வளத்தை குறிக்கும்.

பசுக்களை காமதேனு எனவும் கோமாதா என அழைப்பதற்கு காரணம் மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது.

நம் கலாச்சாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டு உள்ளது. பசுக்கள் பல பலன்கள் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.



எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். நம் தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நல்ல சக்தி பரப்பும் வகையில் இந்நாளை கொண்டாடுவோம்.

இது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் முறையான ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...