முதுமலை நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய மயில் - இணையத்தில் வீடியோ வைரல்!

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில் முதுமலை நெடுஞ்சாலையில் பெண் மயில்களை வசிகரிக்கும் விதமாக ஆண் மயில், தோகை விரித்தாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய ஆண் மயிலை, பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வரும் காட்சியை வாகன ஒட்டிகள் வியர்ந்து பார்த்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ளது. இதனால் வனப் பகுதிகள் வறண்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலும் மரம், செடி, கொடிகள் பொலிவிழந்து வருகின்றன.



இதனால் வன விலங்குகள் சாலை ஓரத்தில் உலா வர தொடங்கி உள்ள நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலைக்கு வந்த ஒருஆண் மயில் தன் அருகே வந்த பெண் மயில்களைகாதல் வசப்படுத்தி அவற்றை வசிகரிக்கும் விதமாகத் தனது தோகைகளை விரித்து நடனமாடியது. ஆண் மயிலின் நடனத்தைப் பார்த்து பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வந்தன.

அப்போது அந்த வழியே சாலையில் சென்ற வாகனங்களை கூட பொருட்படுத்தாத ஆண் மயில் தொடர்ந்து நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த வாகன ஓட்டிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...