ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார் லியாகத்அலிகான் - திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு!

உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணியில் இருந்த சிறுபான்மை பிரிவு நலப் பிரிவு மாநில செயலாளர் லியாகத் அலிகான் அக்கட்சியில் விலகி தற்சமயம் தன்னுடைய சொந்த கட்சியான எம்ஜிஆர் இயக்கத்தை மீண்டும் செயல்பட துவக்கியுள்ளார்.


திருப்பூர்: ஓபிஎஸ் அணியின் அதிமுக முக்கிய நிர்வாகியான சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் லியாகத்அலிகான் ராஜினாமா செய்ததோடு திமுகவுக்கு வாக்கு சேகரிக்க முடிவு செய்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணியிலிருந்த சிறுபான்மை பிரிவு நலப் பிரிவு மாநிலச் செயலாளர் லியாகத் அலிகான் அக்கட்சியில் விலகி தற்சமயம் தன்னுடைய சொந்த கட்சியான எம்ஜிஆர் இயக்கத்தை மீண்டும் செயல்படத் துவக்கினார்.

இதற்கிடையில் உடுமலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



ஓபிஸ் மற்றும் இபிஸ் அணியில் கடந்த சில வருடங்களாக இருந்த நிலையில் இருவரும் சுயமரியாதை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். ஆகையால் நலம் விரும்பிகள் அறிவுறுத்தலின்படி அக்கட்சியிலிருந்து தற்போது விலகி உள்ளேன்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டு காலமாகச் செயல்படாமல் இருந்த எம்ஜிஆர் மக்கள் இயக்கத்தை மீண்டும் செயல்படத் துவக்கியுள்ளேன். இதில் முதல் கட்டமாக தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்குத் தீவிர வாக்கு சேகரிக்கவுள்ளேன்.

வாக்கு சேகரிப்பின் போது முதல்வர் மு.க ஸ்டாலினின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துரைப்பேன். கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரின் அணியிலிருந்த போது பல்வேறு மனக்கசப்புகளைச் சந்தித்தேன். குறிப்பாக இருவரும் சுயமரியாதை இல்லாமல் பாஜகவின் அனுதாபிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் தற்பொழுது நல்ல முடிவெடுத்துச் செயல்படாமல் இருந்த எம்ஜிஆர் இயக்கத்தை மீண்டும் செயல்படுத்தி இதன் மூலம் அதிமுகவில் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து எம்ஜிஆர் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவேன்.

இவ்வாறு லியாகத் அலிகான் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...