முதுமலையில் தேசிய மீட்பு படையினருக்கு தீ தடுப்பு பயிற்சி

முதுமலையில் விஜயவாடாவிலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்களுக்கு வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுக்க தடுப்பு கோடுகள் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி பெறவிஜயவாடாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 50 வீரர்கள் வந்துள்ளனர்.



அவர்களுக்குமுதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள AWTC வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து கள பயிற்சி அளிக்கப்படுகிறது.



இதில், தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், கட்டு படுத்தப்பட்ட எரியூட்டல் மற்றும் வன தீ தடுப்பு உபகரணங்கள் குறித்துமுதுமலை மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம், (AWTC) தெப்பக்காடு மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியானது கோவை CASFOS கல்லூரியில் பிப்ரவரி 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ளபல்வேறு வனப் பகுதிகளில் அளிக்கப்பட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...