உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை தூசி படிந்து காணப்படுவதால் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குதினமும் உடுமலைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் பழமையான வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கடந்த சில மாதங்களாகவே புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையக் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேற்கூரை போதிய பராமரிப்பு இல்லாமல் தூசி படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.



பார்ப்பதற்கு மிகவும் பழமையான கட்டிடம் போல காட்சியளிக்கும் நிலையில், ஆதார் சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் மீதுமேற்கூரையில் இருந்துதூசுகள் அதிக அளவு விழுந்து வருகின்றன.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறையாவது வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...