பல்லடத்தில் பட்டப்பகலில் வீட்டின் ஓட்டைப்பிரித்து திருட முயற்சி - கையும் களவுமாக சிக்கிய திருடனால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பட்டப் பகலில் நான்கு வீடுகளில் ஓட்டை பிரித்து அரிவாளுடன் திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய கூட்டாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சரோஜினி. இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரோஜினி கோவையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.



இதனை நோட்டமிட்ட திருடர்கள், இன்று பிற்பகல் 11 மணி அளவில் அவரது வீட்டின் ஓட்டை பிரித்து கையில் அரிவாளுடன் உள்ளே இறங்கியுள்ளனர்.



ஏதேச்சையாக சரோஜினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், அவரது வீட்டிற்கு சென்றபோது சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்தபோது கையில் அரிவாளுடன் நின்ற திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



உடனடியாக ஊர் மக்கள் திருடனை கையும் களவுமாக பிடித்துவைத்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்து விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், வீட்டில் திருட முயன்றவன் மேட்டூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், மாதப்பூர் அருகே நல்லா கவுண்டம்பாளையத்தில் பெயிண்டர் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தன்னுடன் தன் நண்பர்களும் திருட வந்ததாகவும், மேலும் மூன்று வீடுகளில் ரூபாய் 5000 திருடி உள்ளதாகவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து பிடிபட்ட ஈஸ்வரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய ஈஸ்வரனின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரிவாளுடன் வீட்டின் உள்ளே இறங்கி திருடர்கள் திருட முயன்ற சம்பவம் மாதப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...