உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதுபவர்களை அப்புறப்படுத்தாதீர்கள்..! - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏழை, எளிய, படிக்கத் தெரியாத மக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வந்தவர்களை அப்புறப்படுத்தும் நகராட்சி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மனு எழுதி கொடுத்து வந்த நபர்களை வெளியேற்றக் கூடாது என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் பத்துக்கு மேற்பட்டோர் பல வருடங்களாக ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் படிக்கத் தெரியாத மக்களுக்கு உதவி செய்கின்ற நோக்கத்துடன் மனுக்கள் எழுதிக் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நகராட்சி சார்பில் இப்பகுதியில் யாரும் இருக்க கூடாது என தெரிவித்த காரணத்தால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.



நகராட்சி ஆணையாளர் மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த மாட்டார்கள் என உறுதி அளித்தார்.



இந்த மனு வழங்கும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழர் பண்பாட்டு பேரவை நாராயணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...