துடிப்புடன் இருந்த இருதயத்தில் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசிய அளவில் கேஎம்சிஎச் சாதனை


கோவையைச் சேர்ந்த கேஎம்சிஎச் மருத்துவமனையில் துடித்துக்கொண்டிருந்த இதயத்தில் இருதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவமனைத் தரப்பில் ஆசிய அளவில் இச்சிகிச்சை தற்போதே முதன்முறையாக நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.

இன்று காலை இதுகுறித்து கேஎப்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

இந்த அறுவை சிகிச்சை கேஎம்சிஎச் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். அரோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் நோயைக் குணப்படுத்துவதில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். 

அமெரிக்காவில் இதுவரை 7-8 மனிதர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவில் கேஎம்சிஎச் மருத்துவமனை இதில் முன்னோடியாக தற்போது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிச்சதவிகிதம் 90 முதல் 95 சதவிகிதம் ஆகும். வயதாகும் போது இருதயத்தில் உள்ள இரத்தக்குழாய்கள் கடிணமாக மாறுகின்றன. இந்த 76 வயது நோயாளி இதற்கு முன்னரே இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்கள் மருத்துவமனையில் உள்ள நிபுனர்கள் வெனிபிரி வால்வை பொருத்துவதே இதற்கு சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று பரிந்துரை செய்தனர்.

எங்களுடையே முதல் முயற்சியிலேயே இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது நோயாளி சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களிலேயே நடக்கத் துவங்கிவிட்டார்" என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருதய சிகிச்சை நிபுனர் மருத்துவர் தாமஸ் அலெக்ஸ்சான்டர் மற்றும் இருதய சிகிச்சை பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜனாத் ஆகியோரை நல்ல ஜி.பழனிச்சாமி பத்திரிகையாளர்கள் மத்தியில் அறுமுகம் செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...