ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி அகடமிக் எக்ஸலன்ஸ் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ்- ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழக அளவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியே முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இக்கல்லூரி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை ஐசிடி அகடமி ஆப் தமிழ்நாடு வழங்கியுள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் சமீபத்தில் இம்சி கார்ப்பரேஷனை வழங்கியது. அது முதல் டெல் இஎம்சி சென்டர் ஆப் அகடமிக் எக்ஸலன்ஸ் இன் டேட்டா சையின்ஸ் அன்டு பிக் டேட்டா அனலட்டிக்ஸ் மையங்களை தமிழகத்தில் 5 கல்வி நிறுவனங்களில் இதுவரை நிறுவியுள்ளது. இந்திய அளவில் 50 கல்வி நிறுவனங்களில் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் அகடமிக் எக்ஸலன்ஸ் மையத்தை ஏன்செட் இந்தியா நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களின் தொடர்பு பிரிவின் தலைவர் அபிஜித் ஸ்ரீனிவாஷ் தொடக்கி வைத்தார். டெல் நிறுவனத்தைச் சேர்ந்த துணைப் பொது மேலாளர் ஜி.சரவணன், இம்மையத்திற்கான பொருப்பினை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் செயளர் சுவாமி கரிஸ்தானந்தா-விடம் ஒப்படைத்தார்.

இக்கல்லூரியின் முதல்வர் சி.ஜெயபாலகிருஷ்ணன், இயக்குனர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் கணினி அறிவியல் துறை டீன் மற்றும் தலைவர் கந்தப்பன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...