பொள்ளாச்சி பி.ஏ.பி. கால்வாயில் திடீர் உடைப்பு - சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியில் பி.ஏ.பி. கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணானது. இதையடுத்து, கால்வாய் உடைப்பை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து வேட்டைக்காரன் புதூர் வழியாக கோட்டூர், வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம், திவான்சாபுதூர் உள்ளிட்ட 11,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பி.ஏ.பி. கால்வாய் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.

A-B என இரண்டு மண்டலங்களாக பிரித்து விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவது வழக்கம். தற்போது B மண்டலதில் உள்ள 5,623 ஏக்கர் பாசன நிலங்களுக்கு ஆழியார் அணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 120 நாட்களுக்கு ஐந்து சுற்றுகளாக தண்ணீர் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.



அதன்படி, மூன்று சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது நான்காவது சுற்று தண்ணீர் வேட்டைக்காரன் புதூர் கால்வாய் வழியாக சென்று கொண்டுள்ளது.



இந்நிலையில், ஆழியார் அணையில் இருந்து 17-வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளியாபுரம் பகுதியில் பி.ஏ.பி. கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு பாசன நீரானது அருகில் இருந்த தென்னந்தோப்புக்குள் புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணி துறை அதிகாரிகள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நிறுத்தி ஆய்வில் ஈடுபட்டனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கால்வாயின் பக்கவாட்டு சுவரில் கசிவு இருந்ததாகவும், அதனால் கரை ஓரம் உள்ள மண் திட்டு இளகி கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களுக்குள் கால்வாய் சீரமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஒப்பந்தப்படி மீதமுள்ள ஒரு சுற்று தண்ணீரும் வழங்கப்படும், என்றனர்.

பி.ஏ.பி. கால்வாயில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த உடைப்பால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...