தாராபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து - தனியார் நிறுவன மேலாளர் உட்பட 2பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியம்பாளையம் அருகே புறவழிச் சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் நிறுவன மேலாளர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.



தாராபுரம்- கொட்டமுத்தம்பாளையம் தெற்கு குடில்தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரஞ்சித்குமார்,(வயது 23). தெலங்கானா மாநிலம் மனோஜ் சோமநாதன், மகன் மனோஜ் விஸ்வநாதாச்சாரி (வயது 37). நேற்றிரவு இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.



தாராபுரம் புறவழிச் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தபோது நஞ்சியம்பாளையம் பாலம் பகுதியில் இவர்களது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை மைய தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், தலையில் அடிபட்டு மூளை சிதறிய நிலையில் ரஞ்சித்குமார் மற்றும் மனோஜ்விஸ்வநாதாச்சாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் பலியான இருவரது உடல்களும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் அகலமான ரோட்டில் இருந்து குறுகலான ரோட்டிற்கு மாறும்போது இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பது கொட்டமுத்தம்பாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...