கோவை யானைக்குட்டியின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு - ஆய்வுக்கு அனுப்பிய வனத்துறை!

கோவை பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்த யானை குட்டியின் எழும்பு, தோல் உள்ளிட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் மாங்குலி, தடாகம் காப்பு காட்டு பகுதியில் நேற்று வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது இறந்த யானை குட்டியின் உடல் பாகங்கள், எலும்புகள் சிதறிக் கிடந்தன.

தகவலறிந்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, ஆங்காங்கே சிதறி கிடந்த எலும்பு துண்டுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில் கோவை கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், ரேஞ்சர் செல்வராஜ் மற்றும் தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், கண்டறியப்பட்ட எலும்புகள் வைத்து யானை குட்டி வயது சுமார் மூன்று வார காலமாக இருக்கலாம் என்றும், அக்குட்டி இறந்து பிறந்து இருக்கலாம் அவ்வாறு இறந்த யானை குட்டியை வனப்பகுதியில் உள்ள செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் உண்டதால் பாகங்கள் சிதறி கிடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.

பின்னர், சேகரிக்கப்பட்ட யானைக் குட்டியின் ஒரு சில எலும்புகள் மட்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்ற பாகங்கள் அதே பகுதியில் வனத்துறையினரால் புதைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...