கோவையில் மனநலம் பாதித்த முதியவர் மாயம் - காவல்நிலையத்தில் மகன் புகார்!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த தனது தந்தையைக் காணவில்லை என அவரது மகன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை ஜி.என்.மில்ஸ், எஸ். எஸ். கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் ஜெயின். இவரது தந்தை கோபி. 65 வயதான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கோபி திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அக்கம், பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது மகன் ஜெயின் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் கோபியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...