சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு - ஈஷாவில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணி தீவிரம்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கவுள்ளார். இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையத்ததில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை ஈசா யோகாவில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொள்ள உள்ளார்.

இதையொட்டி, 18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.

முதல் முறையாக கோவை வரும் குடியரசு தலைவர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார்.

பின்னர் வடவள்ளி, தொண்டாமுத்தூர் வழியாக ஈசா யோகா மையத்திற்கு செல்கிறார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு செல்லவுள்ள சாலைகளை ஐஜி சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர் வருகையையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ வருகையை ஒட்டி ஈசா யோகா மையத்தில் ஹலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...